Saturday, December 1, 2007

தங்கரின் துணிச்சல்

தனது "ஒன்பது ரூபாய் நோட்டை' பற்றி பொதிகை டிவியில் சத்யராஜூடன் பேசிய தங்கர் பச்சன், வழக்கம் போல் சிவாஜியை ஒரு வாங்கு வாங்கினார். எல்லா தமிழ் படங்களும் இரண்டு வாரம் கழித்து தான் கர்நாடகாவில் ரீலீசாக முடியும். ஆனால் சிவாஜிக்கும் மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது என அவர் எழுப்பிய கேள்வி நியாயமாகத் தான் தோன்றியது.
மற்றபடி வழக்கம் போல் தான் மட்டும் தான் தமிழில் சினிமா என அதிகபிரசங்கித்தனமாக கூறினார். உடனிருந்த சத்யராஜ் வேறு வழியில்லாமல் தலையை ஆட்டிவைத்தார்.